நத்தம் வாழ் நண்பர்களே! வாருங்கள்! நம் அழகிய ஊரை வர்ணிப்போம்! பாரம்பரியம் மிக்க நம் ஊர் பல்வேறு அதிசயங்கள், நிகழ்வுகள்,வரலாறுகள் ஆகியவற்றை நிகழ்த்தி அமைதியின் உதாரணமாய் திகழ்ந்து வருகிறது! ஜமீன்களும்,முதலாளிகளும் வாழ்ந்த இப்பூமி பற்றி எழுதுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்! ஆஹா! என்ன ஆனந்தம்! அன்று நத்தம் பாவோடியில் இளையனாய் இருக்கும் போது ஆடிய ஆனந்த விளையாட்டுக்கள்!தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டி, முங்கு நீச்சல் அடித்து களித்து அனுபவித்த பழைய நாட்கள் இன்றும் என் கண் முன் வந்து நிற்கிறது! அன்று அண்ணா வாத்தியார் தந்த அரை கோதுமை மாவுக்கு ஈடு வருமா? இன்றுள்ள பூஸ்டும் போன்விடாவும்!கல்மண்டபத்தில் அடித்த அரட்டைகள்! ஆஹா! ஆனந்தம்! (தொடரும்….)
natham 3
February 1, 2009
பம்பரம், கிட்டி, கோழிக்காய்.தாபுலாங்குச்சி,ஒன்னான்குழி,பெந்தா,கம்பு தள்ளி,சீச்சு கல்லு,கபடி,வாலிபால்,புட்பால், என சீசனுக்கு ஒரு விளையாட்டு விளையாடி எப்படி களித்தோம்! அந்த நாள் மீண்டும் வருமா? மகமாயி தியேட்டரில் மண்ணை கோபுரமாக்கி அதில் உட்கார்ந்து ஒட்டு பீடி குடித்துக் கொண்டே படம் பார்த்த மகிழ்ச்சி இன்று ஏசி தியேட்டரில் பார்த்தால் கூட கிடைக்க வில்லையே! மைனார் அண்ணன் காய்ச்சிய துண்டுகறி சோறு மணம் 5 தட்டை தின்றாலும் திகட்டாது! மாப்பிள்ளை சாப்பாட்டில் தின்று விட்டு செமிப்பதற்க்காக கல்மண்டபத்தில் உருண்டதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது!
Advertisement
Comments on: "natham 3" (1)
Assalamu alikkum varah…
Mamoo eppadi irukkai? Nalam nalamariya aaval.
mamoo appadiya nam orin mukkiya present event kalai thoguthu
valanginal ennai phontra forgien in work pannum nam nanbargalukku rompa useful aka irukkum.
phone il news i kattalum intha mathree text vadivil parkkum phothu santhosamaga irukkum.
ungal pani thodara valthukintran.
regards
syed sultan.V.K.A.
abiramam